வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2016 (16:25 IST)

ஜெயலலிதா விவகாரத்தில் துணை போகும் கௌதமி: சீறும் சி.ஆர்.சரஸ்வதி! (வீடியோ இணைப்பு)

ஜெயலலிதா விவகாரத்தில் துணை போகும் கௌதமி: சீறும் சி.ஆர்.சரஸ்வதி! (வீடியோ இணைப்பு)

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கௌதமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
பொதுமக்கள் பலருக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் கௌதமி கடிதம் எழுதியதை பலரும் பாராட்டினர். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் குறிப்பாக சசிகலாவை தற்போது ஆதரிக்க ஆரம்பித்திருப்போர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து நடிகை கௌதமி கடிதம் எழுதியதிற்கு அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பதில் அளித்துள்ளார். அதிமுக கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் சிலர் வேண்டுமென்றே முயற்சி செய்து வருகின்றனர். வதந்திகள் மூலம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கு நடிகை கௌதமி துணை போகிறார் என அவர் குற்றம் சாட்டினார்.

 

நன்றி: Polimer News
 
மேலும் அதிமுகவிற்கும் கௌதமிக்கும் என்ன தொடர்பு, ஒரே ஒருமுறை கமல் ஹாசன் குடுமபத்துடன் வந்து ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறார், மற்றபடி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவை கௌதமிக்கு தெரியாது என்றார். வதந்திகளை பரப்ப நடிகை கௌதமி உதவ வேண்டாம் என அவர் கூறினார்.