1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CPI Not in DMK Alliance: State Secretary Veerapandian Makes Official Announcement

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை" மாநில செயலாலர் வீரபாண்டியன் அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், "திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை" என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால நலன் கருதி இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த சில தேர்தல்களாக திமுக கூட்டணியில் நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு மற்றும் கொள்கை ரீதியிலான சில முரண்பாடுகள் காரணமாக கூட்டணிக்குள் அதிருப்தி நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
 
திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் வெளியேறியுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, வரவிருக்கும் தேர்தல்களில் தமிழக அரசியல் கூட்டணியில் ஒரு பெரிய மாற்றத்தையும், புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த அறிவிப்பு அறிவாலய வட்டாரத்திலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்பட மேலும் சில கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நேரு சாதனையை மோடி முறியடித்துவிட்டார் என்பது பிழை: ப சிதம்பரம்