1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2015 (04:28 IST)

குற்றாலத்தில் சீசன் களை கட்டியது: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

குற்றாலத்தில் சீசன் துவங்கியதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
 

 
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குற்றால அருவிகள் கண்களுக்கும், மனதிற்கும், உடலுக்கும் ஒருசேர விருந்து படைப்பவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது. குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீரில் குளிப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
 
மேலும், இந்தத் தண்ணீரில் குளிப்பது உடலுக்குப் புத்துணர்வை தருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.
 
குற்றாலத்தில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த மூன்று மாதங்களிலும் சாரல் மழை விட்டுவிட்டுப் பெய்து பூமிக்கும், அங்கு வருபவர்களுக்கும் நல்ல குளிர்சியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
 
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி, தேன் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
 
இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், ரம்ராஜன் பண்டியை முஸ்லீம் மக்களுக்கு விடுமுறை என்பதால், வழக்கத்தைவிடகூட்டம் அதிகமாக காணப்பட்டது.