கொரோனா : 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளனர்!!!

coronovirus
Sinoj| Last Updated: திங்கள், 6 ஏப்ரல் 2020 (19:48 IST)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 50 பேர் உயர்ந்ததை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும் கொரோனா பாதிப்பால்
சிகிச்சைக்காக முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 26 வயது பெண் மாணவி குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :