வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 மே 2015 (18:40 IST)

இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு

இந்திய வரலாற்றில், அதிக அளவு ஊழல் செய்யும் டாப் 10 பொதுப்பணித்துறை அதிகாரிகளின்  பட்டியலை வெளியிட்டுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்தாரர்கள் சங்கம் சார்பில் 5 பேனர்கள் வைக்கப்பட்டது.
 
அதில் 2014 - 2015 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஊழல் செய்த பொறியாளர் யார் என்பது குறித்து விரைவில் விளம்பரம் பலகை வைக்கப்படும் என்று அறிவித்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணாமணி, தமிழக பொதுப்பணித்துறையில் அதிக அளவில் ஊழல் செய்யும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட பட்டியலையும், அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் ஒப்பந்ததாரர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கத்திடம் புகார் மனு கொடுத்தார்.
 
மேலும், பொதுப்பணித்துறையில் அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டு வரும் டாப் 10 பொறியாளர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டனர்.  அதன் விவரம் இதோ:-
 
மோகன்ராஜ் - கண்காணிப்பு பொறியாளர், பாண்டியராஜ் - உதவி செயற்பொறியாளர், ராஜசேகர் - உதவி செயற்பொறியாளர், திருமூர்த்தி - உதவி செயற்பொறியாளர், சங்கரலிங்கம் - உதவி செயற்பொறியாளர், சிவசண்முகசுந்தரம் - உதவி செயற்பொறியாளர், கிருஷ்ணசாமி - உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன் - உதவி பொறியாளர், செந்தில் கமலாகரன் - உதவி பொறியாளர், ராஜகோபால் - செயற்பொறியாளர்.
 
இந்த விவகாரம் குறித்து, ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக பொதுப்பணித்துறையில் அதிக அளவில் ஊழல் செய்யும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட பட்டியலையும், அவர்கள் மீது நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கத்திடம் மனு அளித்துள்ளோம். இந்த ஊழல் அதிகாரிகளினால் எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேனர் வைத்து பரபரப்பை கிளப்பிய ஒப்பந்ததாரர்கள், தற்போது படாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியலை  வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
 
அடுத்து என்னவோ...?