தொடர்புடைய செய்திகள்
- தர்பூசணி காரணமல்ல!.. 3 பேர் இறந்த சம்பவத்தில் திருப்பம்..
- கோவையில் செந்தில் பாலாஜியின் பிரியாணி விருந்து: உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
- பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
- ரூ.70,000 கோடி வர்த்தகத்தை மறைத்து வரி மோசடி.. பிரியாணி கடைகளின் டூப்ளிகேட் பில் சாப்ட்வேர் கண்டுபிடிப்பு..!
- பிரியாணி கடைகள் மூலம் 70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு!.. தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?..
ஹோட்டல் பிரியாணியில் பூச்சி!.. வாலிபருக்கு அடிச்ச லக்கி பிரைஸ்!..
இந்தியா முழுவதும் உள்ள மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மதிய உணவாக பிரியாணி இருக்கிறது. இந்தியாவில் டோர் டெலிவரி செய்யும் மொபைல் உணவு ஆப்களில் பிரியாணிதான் அதிக எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்படுகிறது. அதுவும் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பலரும் மதிய உணவாக பிரியாணி சாப்பிடுகிறார்கள். இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.. ஒரு பிரியாணியின் விலை ஹோட்டலை பொறுத்து 100 முதல் 300 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் சாப்பிட சென்ற இடத்தில் பிரியாணியில் இருந்த பூச்சி காரணமாக ஒருவருக்கு ஒரு சூப்பர் ஆஃபர் கிடைத்திருக்கிறது. புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் பிரியாணி சாப்பிட போயிருக்கிறார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட பிரியாணியில் ஒரு பூச்சி செத்து கிடந்திருக்கிறது. இதைப்பற்றி அவர் கேட்டதற்கு ஹோட்டல் நிர்வாகம் சரியாக பதிலளிக்கவில்லை.
அதில், கோபமடைந்த அவர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு அந்த ஹோட்டல் நிறுவனம் ரூ.10 ஆயிரம் இழுப்பீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு அடுத்த 5 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தலா இரண்டு என மொத்தம் 10 பிளேட் பிரியாணியை அவருக்கு இலவசமாக வழங்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திற்கு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.
