வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 17 பிப்ரவரி 2026 (13:05 IST)

காங்கிரஸ் போட்ட 2 கண்டிஷன்கள்!.. திமுக கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல்!...

stalin rahul
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருப்பது திமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனை வருடங்களாக இப்படி கேட்காத காங்கிரஸ் தற்போது இந்த கோரிக்கையை முன் வைக்கிறது. ஏனெனில் ஒருபக்கம் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியபோது அக்கட்சியின் தலைவர் விஜய் எங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என கூறியது இதற்கு முக்கிய காரணமாக தெரிகிறது..

சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் ‘ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது’ என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும், இது ஓயவில்லை. ஒருபக்கம் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் இந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் திமுகவை விமர்சனமும் செய்கிறார்கள்..

இந்நிலையில்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் இன்று சென்னை வந்திருக்கிறார். விரைவில் அவர் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில்தான் திமுகவுக்கு காங்கிரஸ் இரண்டு ஆப்ஷன்களை கொடுத்திருப்பதாக தெரிகிறது. முதலாவது 6 அமைச்சர் பதவி மற்றும் 6 மேயர் பதவிகள் வேண்டும்.. அது இல்லையென்றால் இரண்டாவது ஆப்ஷனாக 12 வாரிய தலைவர் பதவிகள் மற்றும் 6 மேயர் பதவிகள் தர வேண்டும்..

இந்த இரண்டில் ஏதோ ஒன்றை டிக் அடித்து அதை எழுத்துப்பூர்வமாக கூட்டணி உடன்படிக்கையில் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் கூறியிருக்கிறதாம். ஆனால் இதை திமுக மேலிடம் ஏற்க தயாராக இல்லை என செய்திகள் கசிந்திருக்கிறது.