காங்கிரஸ் குழப்பம் நீடிப்பு.. விஜய் எடுக்க போகும் அதிரடி முடிவு..!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொடர் குழப்பங்களும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மர்மமான மௌனமும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுவரை "வெயிட் அண்ட் வாட்ச்" பாணியை கடைப்பிடித்து வரும் நடிகர் விஜய், விரைவில் ஒரு அதிரடி முடிவை எடுக்கப் போவதாக தகவல்கள் கசிகின்றன.
விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்பது வெறும் கூட்டணி குறித்ததாக மட்டும் இருக்காது, அது தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் சமன்பாடுகளை மாற்றியமைக்கும் ஒரு "மாஸ்டர் பிளானாக" இருக்கும் என தெரிகிறது.
டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே காங்கிரஸ் ஊசலாடி கொண்டிருக்கும் வேளையில், விஜய் தனது விர்ச்சுவல் வாரியர்ஸ் மற்றும் இளைஞர் படை மூலம் களத்தில் இறங்க தயாராகிவிட்டார். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் விஜய் எடுக்கும் அந்த ஒற்றை முடிவு, 2026 தேர்தலின் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva