70 தொகுதிகள்.. 1 துணை முதல்வர்.. 6 அமைச்சர்கள்.. விஜய்யிடம் கேட்கிறதா காங்கிரஸ்?
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' வருகை, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை இப்போதே சூடாக்கியுள்ளது. குறிப்பாக, தேசிய கட்சியான காங்கிரஸ், விஜய்யின் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டணியை உறுதிப்படுத்த காங்கிரஸ் தரப்பில் இருந்து சில அதிரடியான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 70 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 1 துணை முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சர் பதவிகளை தர வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.
திமுக கூட்டணியில் தற்போது நீடித்து வரும் காங்கிரஸ், அங்கு தொகுதி பங்கீட்டில் திருப்தி இல்லாததால் விஜய்யை நோக்கி திரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இளைஞர்கள் மற்றும் தலித் மக்களின் வாக்குகளை குறிவைத்து விஜய் காய்களை நகர்த்தி வரும் நிலையில், காங்கிரஸின் இந்த மெகா டீல் விஜய்யால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால், அது தமிழகத்தில் ஒரு புதிய அதிகார பகிர்வு அரசியலுக்கு வழிவகுக்கும்.
Edited by Siva