நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்! – காங்கிரஸ் மனு!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:25 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் காங்கிரஸார் மனு அளித்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இதற்காக பிரச்சாரத்திற்கு சென்ற சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழின துரோகி என்றும், அவரை கொன்றது சரி என்ற ரீதியிலும் பேசியுள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது பற்றியும், இந்திய ராணுவம் குறித்தும் தவறான தகவல்களை பரப்பும் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும், தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதை அவரே ஒப்புக்கொண்டிருப்பதால் அவரது நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டுமெனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :