தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாஜக ஆர்பாட்டம்


K.N.Vadivel| Last Updated: வியாழன், 9 ஜூலை 2015 (04:46 IST)
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி,ஜூலை 10ஆம் தேதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத்‌ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
தமிழ்நாட்டில், டாஸ்மாக் கடை மதுக்களால் ஏற்படும் பாதிப்புகளும், சமூக அவலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பாதிப்பு பெரியவர்களைத் தாண்டி, இளைஞர்களைத் தாண்டி, மாணவர்களைத் தாண்டி, குழந்தைகளையும் நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், சமூகம் மிகுந்த துயரத்திலும், பயந்திலும் உள்ளது.
 
பல்வேறு விபத்திற்கும், சமூக அவலங்களுக்கும் காரணமாக உள்ள மதுவை ஒழிக்காமல் இந்தக் குற்றங்களை ஒழிக்க முடியாது. இதனால் விரைவாக மது ஒழிக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
 
எனவே, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் மூடக் கோரியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரியும் ஜூலை 10ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்தில் உள்ள மண்டல்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :