தமிழக அரசுடன் முழு ஒத்துழைப்பு - ஜெயலலிதாவிடம் மோடி உறுதி

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified ஞாயிறு, 18 மே 2014 (18:35 IST)
முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசிய நரேந்திர மோடி, தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்புடன் மத்திய அரசு செயல்படும் என்று உறுதியளித்தார்.
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி இன்று மதியம் தமிழக முதல்வருடன் தொலைப்பேசியில் நன்றி தெரிவித்தார்.
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ளார். அவரது வெற்றிக்கு நாடு முழுவதும் உள்ள பல கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
 
அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு மோடி வாழ்த்துக்களை தெரிவித்ததாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பிரதமர் பதவியேற்கவுள்ள மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது, தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்புடன் மத்திய அரசு செயல்படும் என்று மோடி உறுதியளித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :