என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா!.. கிறிஸ்துமஸுக்கு புதுத் துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை

கிறிஸ்துமஸுக்கு புதுத் துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 16 டிசம்பர் 2015 (09:24 IST)
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு புதுத் துணி எடுக்காததால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை கொண்டுள்ளார்.
 
 
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பால்ராஜ் (48). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
 
2ஆவது மகள் பெனிட்டா (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பயின்று வருகிறார். இவர், தனக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புதுத் துணி வாங்கி தர வேண்டுமென்று பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
 
ஆனால், அவரது பெற்றோர்கள், சமீபத்தில்தான் சகோதரியின் திருமணம் நடந்து முடிந்ததால் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதனால் பெனிட்டா மனம் உடைந்து காணப்பட்டார்.
 
இதனையடுத்து நேற்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர், திடீரென தனது அறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டார்.
 
சிறிது நேரத்தில் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு பெனிட்டா மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
 
இது குறித்து தகவலறிந்த பூதப்பாண்டி காவல் துறையினர் பெனிட்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :