கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலதிபர்

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலதிபர்


Caston| Last Updated: சனி, 27 ஆகஸ்ட் 2016 (15:31 IST)
தூத்துக்குடி அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வரும் ராதா என்ற 19 வயது பெண்ணை அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடைத்தி வரும் ஹரிஹரசுதன் என்பவர் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

 
 
கல்லூரிக்கு சென்று வந்த ராதாவும், ஹரிஹரசுதனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றி வந்துள்ளனர். அப்போது சுதன் ஆசை வார்த்தைகளை கூறி ராதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
 
பின்னர் படிப்படியாக ராதாவை புறக்கணித்து வந்த சுதன், ராதாவை திருமணம் செய்யாமல் நான்கு மாதத்திற்கு முன்னர் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ராதாவுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது, ராதா கர்ப்பமாக இருப்பது சில நாட்களுக்கு முன்னர் தான் தெரியவந்தது.
 
இந்நிலையில் ராதா தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் சுதன் மீது மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுளது.
 
மேலும் சுதனின் காதல் விவகாரத்தை மறைத்து திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள், உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :