ஒரே நேரத்தில் இருவரை காதலிப்பதாக ஏமாற்றிய கல்லூரி மாணவி - வாட்ஸ் அப்பில் பரபரப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 18 ஏப்ரல் 2015 (15:29 IST)
ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதல் செய்வதாக ஏமாற்றிய பெண்ணின் உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
திருச்சி கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவியும், வாலிபரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.  திடீரென அந்த வாலிபருடனான தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக அந்த கல்லூரி மாணவி துண்டித்து வந்துள்ளார்.
 
 
அதே சமயம் இன்னொருவருடனும் அவர் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அவருடனும் ஊட்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். ஆனாலும், அவர் தனது பழைய காதலை புதிய காதலரிடம் மறைக்காமல் சொல்லி இருக்கிறார். இரண்டு ஆண் காதலர்களும் அவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரு சமயத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் காதலர்கள் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவி இருவருடனும் பழகி வந்தது இருவருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த பழைய காதலர் மாணவி தன்னுடன் எடுத்துக்கொண்ட படங்களை எடுத்துக்கொண்டு, புதிய காதலர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
 
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த புதிய காதலர், அந்த மாணவிக்கு போன் செய்து, மாணவியை கண்ணாபிண்ணாவென்று திட்டுகிறார். மேலும் “நான் அங்கு வருவதற்குள் செத்துவிடு, நான் மாலையை போட்டு விட்டு வந்துவிடுவேன். இல்லையென்றால் உன் அப்பாவிடம் இதையெல்லாம் காட்டி மானத்தை வாங்கி விடுவேன். அப்புறம் உன் அப்பா தூக்கில்தான் தொங்க வேண்டும்” என ஆவேசமாக பேசுகிறார்.
 
அந்த பெண் ‘‘தயவு செய்து வீட்டிற்கு மட்டும் வந்து விடாதே’’ என கெஞ்சுகிறார் மாணவி. பின்னர் அந்த மாணவியின் தோழியும் வாலிபரிடம் சமாதானம் பேசுகிறார். இடையில் புதிய காதலரும் ‘‘என்னை ஏன் ஏமாற்றினாய்?’’ என அந்த மாணவியிடம் கேட்கிறார்.
 
பிறகு புதிய காதலரின் அம்மா அந்த மாணவியிடம் பேசி அறிவுரை வழங்குகிறார்.  ‘‘இரண்டு பேரையும் விட்டு விட்டு படிக்கிற வேலையை பாரும்மா.. உனக்கு வேற ஒரு ‘நல்ல பையனா’ நானே பார்க்கிறேன்..’’ என கூறுகிறார்.
 
இதன் பிறகு முன்னாள் காதலர் ‘‘இப்பொழுது பேசியதையெல்லாம் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன். அதை வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டுகிறார். அவர் சொன்னது போலவே அவற்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்டும் விட்டார். தற்போது இவை படுவேகமாக பரவி வருகிறது. 
 
சமீபத்தில் சென்னையில் காவல்துறை கமிஷ்னர் ஒருவர் பெண் காவலிரம் பேசும் காதல் உரையாடல் மற்றும் பெண் காவல் அதிகாரி கீழ் அதிகாரியை மிரட்டிய உரையாடல்கள் வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது திருச்சி கல்லூரி மாணவி ஒரே சமயத்தில் இரண்டு காதலர்களிடம் பேசும் உரையாடல் மற்றும் படங்கள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :