1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay wants to give govt job to karur people

கரூர் சம்பவம்!. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுப்பது சரியா?...

vijay
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரைப் பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெக நிர்வாகிகளுக்கும்,  விஜய்க்கும் கடும் சோகத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு விஜயே காரணம் என திமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

விஜயை தமிழக அரசு கைது செய்யலாம் என எதிர்பார்த்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதை செய்யவில்லை. மேலும் ‘கரூர் சம்பவத்தில் சதி நடந்திருக்கிறது.. என்னை பலிகடாக்கிவிட்டனர்’ என விஜய் அரசியல் மேடைகளில் பேசினார். தற்போது விஜய் முதல்வராகிவிட்ட நிலையில் நாளை அவர் கரூர் செல்லவிருக்கிறார். கரூர் மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசவிருக்கிறார்..

மேலும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் 32 பேருக்கு அரசு பணிக்கான நியமனத்தையும் அவர் வழங்கவுள்ளார். இந்நிலையில்தான், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தை சென்னைக்கு வரவழைத்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 20 லட்சம் நிதியை தவெக தலைவர் விஜய் வழங்கினார். அதோடு அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

எனவே தற்போது அரசு பணி கொடுக்கத் தேவையில்லை.. அரசாங்க கஜானா காலி என முதல்வர் விஜய் பேசியிருக்கிறார்.. அப்படி இருக்கும் போது எதற்காக அவர்களுக்கு அரசு பணியை கொடுக்க வேண்டும்? ஒருபக்கம் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு தேர்வு எழுதுவதற்காக காத்திருக்கிறார்கள்.. அப்படி இருக்கும் போது 32 பணிகளை அரசு ஒதுக்க வேண்டுமா?’ என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்..

ஏற்கனவே நாம் தமிழர் சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அரசு பணியை கொடுப்பது என்பதில் தமிழக முதலமைச்சர் விஜய் உறுதியாக இருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
சபாநாயகரைச் சந்திக்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்: பின்னணி என்ன?