1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay to Offer Prayers at Moolanur Vanjiyamman Temple Today

பிரச்சாரம் முடிந்ததும் மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம்.. முதல்வர் விஜய் திட்டம்..

vijay
தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தரும் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைவதை ஒட்டி, அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
 
சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை வரும் அவர், நேர விரயத்தையும் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்தடைகிறார். மேட்டுக்கடை முதல் தாசர்புரம் வரையிலான 114 கி.மீ தொலைவுக்கு சுமார் 30 இடங்களில் அவர் பிரம்மாண்ட சாலை வலம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
 
பிரச்சார நிறைவுக்கு பிறகு, வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் வஞ்சியம்மன் கோயிலுக்கு சென்று முதல்வர் விஜய் வழிபாடு நடத்துகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
கனிமொழி, திருச்சி சிவாவுக்கு புதிய பொறுப்பு கொடுத்த மத்திய அரசு.. பாஜகவை நெருங்குகிறதா திமுக?