1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay to Announce Major Upgrades for Drinking Water and Road Infrastructure Following High-Level Review.

குடிதண்ணீர், சாலை மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள்: முதல்வர் ஆலோசனை விரைவில் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு
தமிழக முதல்வர் விஜய் அவர்கள், தமிழகத்தின் அடிப்படை உட்கட்டமைப்புகளை சீரமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று தலைமை செயலகத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை அவர் நடத்தினார். 
 
தமிழகத்தின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
 
குறிப்பாக, கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 'ஸ்மார்ட் வாட்டர் மேனேஜ்மென்ட்' முறையை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. 
 
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான சில அதிரடி அறிவிப்புகளை முதல்வர் விரைவில் வெளியிட உள்ளார். "மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே இந்த அரசின் முதல் கடமை" என்பதே முதல்வர் விஜய்யின் முதல் லட்சியம் ஆகும் 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாமல் போனாலும்!.. சட்டசபையில் உதயநிதி நக்கல்!..