1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay Orders Closure of 200-500 TASMAC Shops Near Schools and Temples: A Bold Step Towards Social Reform.

200 - 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.. கோவில், பள்ளி அருகில் உள்ள கடைகளை அகற்ற முதல்வர் உத்தரவா?

tasmac
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி அதிரடியான நடவடிக்கைகளை தொடங்கிள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அமைந்துள்ள சுமார் 200 முதல் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
 
பல ஆண்டுகளாக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
மதுக்கடைகள் கல்வி நிறுவனங்களுக்கும் கோவில்களுக்கும் மிக அருகாமையில் இருப்பது சமூக அமைதியை கெடுப்பதாகவும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. கடந்த காலங்களில் இது தொடர்பாக பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் முறையான தீர்வு கிடைக்கவில்லை. ஆனால், தவெக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
 
தற்போது அதிகாரிகள் மூலம் குறிப்பிட்ட சுற்றளவிற்குள் இருக்கும் மதுக்கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருமானத்தை விட மக்களின் ஒழுக்கமும், மாணவர்களின் பாதுகாப்பான கல்விச் சூழலுமே முக்கியம் என முதல்வர் விஜய் இந்த உத்தரவின் மூலம் உணர்த்தியுள்ளார். அரசின் இந்த நேர்மறையான தொடக்கம் தமிழக அரசியலில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மிஸ்டர் கிளீன் தான் முதல்வர் விஜய்யின் முதன்மை செயலாளர்கள்.. யார் யார் தெரியுமா?