1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay Announces 'Annan Seer' Scheme: 8g Gold Coin and Silk Saree for 60,000 Women

பொங்கலுக்கு 'அண்ணன் சீர்' திட்டம்: தங்க நாணயம், பட்டு புடவைகளுக்கு டெண்டர்...

அண்ணன் சீர் திட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் 'அண்ணன் சீர்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
 
இத்திட்டத்தின் கீழ், 60,000 ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம்  மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது. தற்போதைய சந்தை மதிப்பில் ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.90,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை அரசே நேரடியாக வழங்குகிறது.
 
இதற்கான டெண்டர்கள் தங்கத்திற்கு டிசம்பர் 7, 2026 அன்றும், பட்டுப்புடவைகளுக்கு டிசம்பர் 8, 2026 அன்றும் திறக்கப்பட உள்ளன. வரும் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
 
முந்தைய திட்டங்களில் நிலவிய குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், ரொக்கத்திற்கு பதிலாக நேரடியாக தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையாகவே வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் திருமண பொருளாதார சுமையை பெருமளவில் குறைக்கும்.
 
"எந்தவொரு ஏழை பெண்ணின் திருமணமும் பணமின்மையால் நின்றுவிட கூடாது" என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மதுரை - தூத்துக்குடி இரட்டை அகல ரயில் பாதை: நிலம் கையகப்படுத்த அதிரடி கெஜட்!