விஜயதசமியன்று கோவில் திறப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

Papiksha Joseph| Last Updated: புதன், 13 அக்டோபர் 2021 (09:43 IST)

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு படிப்படியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. கொரோனா மூன்றாம் அலை பரவும் அச்சத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா? என்று தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை
நேற்று மதியம் 1.30-க்கு ஒத்திவைத்தது.

அதன்பின்னர் கோவில்களை திறப்பது குறித்து முதல்வர் நாளை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் விஜயதசமியன்று கோவில்கள் திறப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அத்துடன், கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வு அளிப்பது குறித்தும் முதல்வர் இன்று ஆலோசனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :