சேத்துப்பட்டு ஏரியில இனி ஜாலியா படகு சவாரி போகலம்


Suresh| Last Updated: சனி, 20 பிப்ரவரி 2016 (15:08 IST)
சென்னை சேத்துப்பட்டு ஏரி படகு சவாரி விடுவதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

 
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது சேத்துப்பட்டு ஏரி.
 
இந்த ஏரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் முழுவதும் நிரம்பியது.
 
இந்நிலையில், இந்த ஏரியில் சுற்றுலா படகு சவாரி விட முடிவு செய்யப்பட்டு, இதற்காக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன், ஏரியை சுற்றியுள்ள கரைப்பகுதிகளும் பலப்படுத்தப்பட்டு, இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது,
 
ஏரியின் மத்தியயில் கம்பீரமாக நிற்கம் மரம் அந்த ஏரிக்கு மிகப்பெரிய அழகை கொடுப்பதாக உள்ளது.


 

 
தற்போது, இந்த ஏரியைச் சுற்றி பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்தநிலையில், சேத்துப்பட்டு ஏரியில் சுற்றுலா படகு சவாரி அடுத்த வாரம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :