பிரபல நடிகையிடமிருந்து என் கணவரை காப்பாற்றுங்கள் : மனைவி கதறல்


Murugan| Last Updated: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (12:07 IST)
சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராதாவிடமிருந்து தன்னுடைய கணவரை மீட்டு தரும்படி, சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகரின் மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் உமாதேவி. அவரின் கணவர் முனிவேல் தற்போது அதிமுக கட்சியில், கோடம்பாக்கம் வட்ட துணை செயலாளராக உள்ளார்.  உமாதேவி,  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.
 
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
 
சுந்தர டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ராதா, என்னிடமிருந்து எனது கணவரை பிரிக்க முயற்சி செய்கிறார். அவர் மீது ஏற்கனவே சென்னை மாம்பலம் மற்றும் விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளேன். போலீசார் ஏற்கனவே அவரை எச்சரித்துள்ளனர்.
 
ஆனால் அதன்பின்னும், அவர் என் கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி எங்களின் சந்தோஷத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார். என் கணவரை எங்கே என்னிடம் இருந்து பிரித்துவிடுவாரே என்று எனக்கு பயமாக உள்ளது. 
 
எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுகிறார். மேலும், என்னை வேறு ஒரு நபருடன் இணைத்து தகாத வார்த்தைகளால் திட்டி, எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இதனால் நான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். 


 

 
மேலும், என் கணவரை நேற்று முதல் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்தான் என் கணவரை ஏதோ செய்துள்ளார் என்று அச்சமாக உள்ளது. எனவே அவரிடமிருந்து என் கணவரை மீட்டுத்தரவேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :