1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Traffic Advisory: Major Diversions for New Year 2026 Celebrations

இன்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல்கள்..!

சென்னை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இன்று இரவு நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து மாற்றங்களை சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது. 
 
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், இன்று  இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடற்கரை உட்புற சாலைகளில் இன்று காலை முதல் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. அதற்கு பதிலாகச் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் தீவுத்திடல் மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். 
 
அடையாறில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை சந்திப்பிலேயே திருப்பி விடப்பட்டு மந்தவெளி, லஸ் மற்றும் மயிலாப்பூர் வழியாக செல்ல வேண்டும்.
 
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகச் சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும்.
 
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை பொறுத்தவரை, இன்று இரவு 8 மணி முதல் வாகனங்கள் 6-வது அவென்யூ நோக்கி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
70 ஐபிஎஸ் அதிகாரிகள்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள்.. ஒரே நாளில் இடமாற்றம்.. என்ன காரணம்?