செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 30 ஜூன் 2025 (13:12 IST)

சென்னை புதிய தாழ்தள மின்சார பேருந்துகள்: எந்தெந்த வழியாக செல்லும்? பேருந்து எண் என்ன? - முழுமையான விவரங்கள்!

Chennai electric bus

சென்னையில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது என்ற விவரங்களை காணலாம்.

 

புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த தாழ்தள பேருந்துகளில் சீட் பெல்ட், மொபைலை சார்ஜ் செய்து கொள்ளும் போர்ட் உள்பட பல வசதிகள் உள்ளன.

 

இந்த தாழ்தள பேருந்துகள் சென்னையின் 11 முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக ப்ராட்வேயில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை (பேருந்து எண் 18ஏ) 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல எம்.கே.பி நகரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு (பேருந்து எண் 170TX) 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற வழித்தடங்களில் 5 முதல் 10 வரையிலான பேருந்துகள் சுழற்சி முறையில் இயக்கப்படுகின்றன. 

 

மின்சார தாழ்தள பேருந்து அட்டவணை:

 

Chennai electric bus
 

Edit by Prasanth.K