தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்ற விவரங்கள்:
பணி காலம்: அக்டோபர் 20, 2025 முதல் அக்டோபர் 24, 2025 வரை.
மாற்ற நேரம்: காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.
சேவை இடைவெளி: இந்த நேரத்தில், ரயில்கள் வழக்கமான 7 நிமிட இடைவெளிக்குப் பதிலாக, 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
காலை 06:30 மணிக்கு பிறகு, அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும்.
பயணிகள் தங்கள் பயணத்தை இந்த மாற்றங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, பயணிகள் உதவி மையத்தை (1860-425-1515) தொடர்பு கொள்ளலாம்.
Edited by Mahendran