1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 அக்டோபர் 2025 (12:44 IST)

கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்.. தமிழக அரசு வழக்கறிஞரிடம் சரமாறி கேள்வி கேட்ட நீதிபதி..!

கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்.. தமிழக அரசு வழக்கறிஞரிடம் சரமாறி கேள்வி கேட்ட நீதிபதி..!
அரசியல் கட்சிகள் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு விதிமுறைகள் வகுக்கப்படும் வரை, சாலைகளில் ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தது. அப்போது தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா, அரசின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது ஆகாதா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், இந்த கட்டுப்பாடுகளுக்கான சட்ட அடிப்படையையும் அவர் வினவினார். விதிகள் வகுப்பதில் உள்ள தாமதத்தை குறித்து நீதிபதி கேள்வி எழுப்ப, அரசு தரப்பு ஆலோசனை நடைபெறுவதாக தெரிவித்தது.
 
தமிழக வெற்றிக் கழகம் தரப்பு, கரூர் பிரச்சாரத்துக்கு தாமதமாக அனுமதி வழங்கியதால் தான் அசம்பாவிதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது. மேலும், சில கட்சிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர்கள் முறையிட்டனர்.
 
அனைத்துக் கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய தலைமை நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படாவிட்டால், நீதிமன்றமே தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
 
Edited by Mahendran