கமல் கட்சியின் ரிட் மனுவை வாபஸ் பெற ஐகோர்ட் அனுமதி!

makkal neethi
கமல் கட்சியின் ரிட் மனுவை வாபஸ் பெற ஐகோர்ட் அனுமதி!
siva| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (13:05 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் தொடர்ந்து கிராமசபை கூட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன என்பது தெரிந்ததே. அதிமுக திமுக கூட கவனம் செலுத்தாத கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கவனம் செலுத்தி வருவதும் சமீபத்தில் காந்தி பிறந்த நாளன்று அனைத்து கிராமங்களிலும் மக்கள் நீதி மய்யம், கிராமசபை கூட்டங்களை நடத்தியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்த கோரி மக்கள் நீதி மய்யம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை பொது நல மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்து உள்ளது

இந்த வழக்கு பொதுநலம் சார்ந்த வழக்கு என்பதால் ரிட் மனுவை வாபஸ் பெறவும் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் ரிட் மனுவை விரைவில் வாபஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :