பல ஆண்களை திருமணம் செய்து பணம் கறந்த மோசடி ராணி

இளைஞர்களிடம் பணத்தை கறந்த மோசடி ராணி


Murugan| Last Updated: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (11:46 IST)
அழகை காட்டியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்னை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

 

 
கைதான மோசடி ராணியின் பெயர் அனிதா(26). சென்னை பெரும்பாக்கத்தில் வசிக்கும் இவர் ஒரு பி.சி.ஏ பட்டதாரி. எந்த வழியோ, கடைசியில் தன்னுடைய இலக்கு பணம் என்ற நோக்கத்திலேயே இருந்திருக்கிறார். அழகை கண்டு மயங்கினால், திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் பிடுங்குவது, இல்லையெனில் கம்ப்யூட்டர் நிறுவங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை கறப்பது என்று மோசடி செய்திருக்கிறார் அனிதா.
 
ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து, அவரை விவாகரத்து செய்து விட்டு, அதன்பின் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
 
சென்னை உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில், அனிதா மீது நான்கு இளைஞர்கள் புகார் கொடுத்தனர். அதில், அனிதா உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் ரூ.3லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் வாங்கினார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று கூறியிருந்தனர்.
 
அவர்களின் புகாரின் அடிப்படையில், அனிதாவை வரவழைத்து போலீசார் விசாரித்த போது, தன் தந்தை பெரிய பணக்காரர் என்றும், கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் சம்பாதிப்பதாகவும், தனக்கு யாரையும் மோசடி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
 
ஆனால், அவர் நான்கு இளைஞர்களிடமும் , அவரது வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்றிருந்ததால் அவரால் தப்பமுடியவில்லை.  அவர் ஏராளமான இளைஞர்களிடம் மோசடி செய்து ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த பணத்தில் பெரும்பாக்கத்தில் ஒரு புதிய வீட்டையும் கட்டி வருகிறார்.


 

 
அவர் இளைஞர்களை மயக்குவதில் பலே கில்லாடி. பேஸ்புக் மூலம் பல இளைஞர்களுக்கு காதல்வலை வீசி, அதில் சிலரை திருமணமும் செய்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார். அவர்களெல்லாம் கண்ணீரோடு தற்போது ஒவ்வொருவராக போலீசாரில் புகார் கொடுத்து வருகிறார்கள்.
 
இதையடுத்து, போலீசார் அனிதாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்பது இனிமேல்தான்  தெரிய வரும் என்று போலீசார் கூறினார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :