சென்னை மேயர், துணை மேயர் உள்பட 157 பேர் சொத்துக்கணக்கை காட்டவில்லை.. அதிர்ச்சி தகவல்...!
சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் 157 கவுன்சிலர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை சட்டப்பூர்வ காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க தவறியுள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மாநகராட்சி விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பதவியேற்ற 90 நாட்களுக்குள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகும்.
ஆனால், சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 43 பேர் மட்டுமே இந்த விதியை முறையாக பின்பற்றியுள்ளனர். 75 சதவீதத்திற்கும் அதிகமான கவுன்சிலர்கள் விதியை மீறியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநகராட்சி நிர்வாகம் பதிலளித்துள்ளது.
இது முந்தைய CCMC விதிகள் 1973 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் செயலாகும். மக்கள் பிரதிநிதிகளிடையே வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்யவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய மேயர் மற்றும் துணை மேயரே இந்த விவரங்களை அளிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
