சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்


வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 13 பிப்ரவரி 2015 (17:01 IST)
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
 
 
அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 10 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இதனையடுத்து நீதிமன்றம் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காண சட்ட மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மாணவர்கள் விளக்கமளித்தனர்.
 
அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :