1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2014 (16:11 IST)

சென்னையில் 60 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளை எழுதினர்

ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிக்கான காலி இடங்களை நிரப்ப முதல் நிலை தேர்வை சென்னையில் 60 ஆயிரம் பேர் எழுதினர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்தத் தேர்வுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில்ல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து திட்டமிட்டபடி தேர்வு நடைபெற்றது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட 24 வகையான குடிமை பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வை எழுதுவதற்கு இந்தியா முழுவதும் 9 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

சென்னையில் உள்ள 145 தேர்வு மையங்களில் தேர்வு எழுத 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 60 ஆயிரம் தேர்வில் பங்கேற்றனர். 1000 க்கும் மேற்பட்டோர் வரவில்லை.

தேர்வு எழுதியவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கபட்டிருந்தது. செல்போன் உள்பட எந்த ஒரு நவீன மின்னணு பொருட்களையும் தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வில்லை. மேலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மதுரையில் 20 க்கு மேற்பட்ட மையங்களிலும், கோவையில் 22 மையங்களில் தேர்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.