செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு சலுகை: குழந்தைகளுக்கான வயது அதிகரிப்பு


Ashok| Last Updated: ஞாயிறு, 1 நவம்பர் 2015 (06:53 IST)
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு பெண் குழந்தைகளுக்கான வயது வரம்பு 10 ஆகா இருந்த நிலையில் தற்போது  12  வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற பெயரில் நாடு முழுவதும் இருக்கும் இந்திய அஞ்சல் துறைகளில் தொடங்கியது. இந்த திட்டம் தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு என்று அறிமுகப்படுத்தியது. 

அறிமுக சலுகையாக, 11 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளும் திட்டத்தில் சேர அனுமதிக்கப்பட்ட நிலையில் இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உருவாகி உள்ளதால், தற்போது, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், இத்திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வட்ட  அஞ்சல் துறை ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறியிருப்பதாவது: பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்வ மகள் சேமிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 73 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ. 2 ஆயிரத்து 328 கோடி அளவுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தக் கணக்குகளை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தான் சேர முடியும். ஆனால், வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதிகுள் பிறந்த12 வயதான குழந்தைகளும் இத்திட்டத்தில் இணையலாம். எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கான கணக்குகளை அஞ்சல்துறை அலுவலங்களில் தொடங்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :