1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 16 ஜூலை 2015 (23:12 IST)

கைது அபாயத்தில் தயாநிதி மாறன்: முன்ஜாமீனை ரத்துச் செய்யக் கோரி நீதி மன்றத்தில் சிபிஐ மனு

பிஎஸ்என்எல் முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
 

 
பிஎஸ்என்எல் முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
 
மேலும், தயாநிதி மாறன் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தடை நீக்கப்படும் என்று நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் முறைகேடு சம்பந்தமாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் கேட்கப்பட்ட பல கேள்விளுக்கு தாயாநிதி மாறன் முறையாகப் பதில் அளிக்கவில்லை என்றும்,  சில கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
 
இதனால், தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முக்கியத் தகவல்கள் கிடைக்கும். எனவே, அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்பதால், தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.
 
இதன் காரணமாக பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் தயாநிதிமாறன் சிபிஐயால் விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.