தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:09 IST)
தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான எம்.ஏ.எம். ராமசாமி லஞ்சம் கொடுத்தாக வந்த புகாரின் பேரில் அவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.
புதிய கம்பெனி தொடங்குவதற்காக கம்பெனிகள் பதிவாளரான மனுநீதி சோழனுக்கு, தொழிலதிபர் ராமசாமி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தங்களுக்கு வந்த புகாரையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் தொழிலதிபர் ராமசாமி மற்றும் மனுநீதி சோழனையும் கைது செய்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம். ராமசாமி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :