வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (11:26 IST)

சிக்கின ஆண்மைக் குறைவை குணப்படுத்தும் பூ சங்கு - மீனவர்கள் உற்சாகம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் சிக்குகின்றன.
 

 
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்குகின்றன. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையில் பல்வேறு வகையான சங்குகள் அகப்படுகின்றன.
 
இதில் பூ சங்கு அதிக மருத்துவகுணம் கொண்டது. இந்த பூ சங்கு சதையை சமைத்துச் சாப்பிடுவதற்கு நல்ல ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும்.
 
மேலும் இது இடுப்புவலி, ஆண்மைக்குறைவு, வயிற்றுப்புண், கால்வலி, உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம் ஆகிய உஷ்ணசம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இதை அதிகம் வாங்கிச்செல்கின்றனர்.
 
இது மட்டுமல்லாமல் இந்த சங்குகள் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பதற்கும், சுண்ணாம்பு தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. இவ்வகை சங்குகள் கல்கத்தா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
இது பற்றி மீனவர் மாரிமுத்து என்பவர் கூறுகையில், ”இந்த சங்கு பல்வேறு வியாதிகளைக் குணப்படுத்தும் அற்புத மருந்தாக மட்டுமல்லாமல் சமைத்துச்சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும்.
 
இது கடலிலிருந்து மூன்று பாகத்தொலைவில் அதிகமாக கிடைக்கும். இந்த சங்கு வலையில் அகப்படுவது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சங்கு வலையில் அகப்படுவதால் வலை கிழிந்து சேதமாகிவிடுகிறது. இதனால் எங்களுக்கு இழப்பும் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.