வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார் – செய்தியாளர்
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2015 (19:55 IST)

கரூர் மாவட்ட மருத்துவமனையில் அலட்சியப் போக்கு : பொதுமக்கள் அவதி

கரூர் மாவட்ட மருத்துவமனையில் பொது மக்களுக்கு சிகிச்சை தரும் அரசு மருத்துவர்களின் அலட்சியப் போக்கு அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.


 


தமிழகத்திலேயே மைய மாவட்டம் என்ற பெயர் மட்டுமில்லாமல் அந்நிய செலாணியை ஈட்டித்தரும் மாவட்டம் என்ற பெயரையும் கரூர் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் வணிகம், ஆன்மீகம், புராதானம் ஆகியவைகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த கரூர் நகரில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை மட்டும் நோயாளிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், அவர்களின் வைத்தியத்திலும் பெரும் அலட்சியப் போக்கினை உருவாக்குகிறது.
 
கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை 3.00 மணியில் இருந்து 3.45 மணி வரை ஏராளமான நோயாளிகள் சென்றதற்கு இந்த டைம் அதாவது 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஓ.பி டைம் ஆதாலால் அந்த செக்ஷனில் தான் பார்க்க வேண்டும் என்றுள்ளனர். அங்கு அரட்டை அடித்துக் கொண்டிருந்த 4 இளம் மருத்துவர்கள், ஐயா டாக்டர் இன்னும் வரவில்லை, நீங்கள் தான் பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு அதற்கு நீங்கள் ஹாஸ்பிட்டல் முன்னாள் புகார் செய்யவும் என அலட்சியமாக இளம் மருத்துவர்கள் கூறி உள்ளனர். 


 

 
மருத்துவர் என்றால் என்ன? அன்னை நைட்டிங்கேல் அம்மையார் விளக்கேந்தி செய்த வைத்தியம் என்ன? என்பதை இவர்களுக்கு தெரியாத போலவும், அ.தி.மு.க ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க தி.மு.க டாக்டர்களா? என விரக்தியில் பொதுமக்கள் கூறி மருத்துவமனையை விட்டு வெளியே சென்றனர். 
 
பின்னர் இந்த செய்தியறிந்த செய்தியாளர்களும், நோயாளிகளாக சென்று பார்த்ததற்கு மிஸ்டர் இது ஓ.பி டைம் நீங்க அங்கேயே சென்று பார்த்துக் கொள்ளுங்கள் டாகடர் இல்லைங்க? என்றதற்கு அதற்கு நீங்கள் முன்னாள் உள்ள அலுவலகத்தில் புகார் செய்யுங்க என்று கூறினார்கள். உடனே ஒரு சில நிருபர்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, உடனே இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் மற்றும் மருத்துவமனை சந்திரன் அவர்களிடம் தெரிவிக்கிறேன் என கூறி பின்னர் டாக்டர்களும், இணை இயக்குநரும் அலறியடித்து கொண்டு வந்தனர். 
 
இந்நிகழ்ச்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஒருவர் நோயாளி மிகுந்த அவஸ்தியில் வந்தால் இப்படி தான் சொல்வார்களா? அதுவும் மழை காலங்களில் என என்ன தோன்றுகிறது. மேலும் அந்த நேரத்தில் மருத்துவம் பார்க்க வந்த டாக்டர் 45 நிமிடங்கள் தாமதமானதால் நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்