வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (11:02 IST)

அதிமுக எளிதில் வெற்றி பெற முடியுமா? உண்மையை உடைத்துச் சொல்கிறார் ப்ரியன்

அதிமுக எளிதில் வெற்றி பெற முடியுமா? உண்மையை உடைத்துச் சொல்கிறார் ப்ரியன்

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக எளிதில் பெற்ற முடியுமா? என்பதை கணித்து கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.
 

 
தமிழக சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாமக, மதிமுக- தமாகா-தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த மக்கள் நலக்கூட்டணி, பாஜக என பல முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
 
ஆனால், ஆளும் கட்சியான அதிமுக வெற்றி எந்த அளவு சாத்தியம் என்று பலருக்கும் அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதைத் தான் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தனது பேனா மூலம் அழகாக அரசியல் சித்திரமாக தீட்டியுள்ளர்.
 
இது குறித்து, நாம் அவரிடம் பேசிய போது, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எல்லா கூட்டணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
 
ஆனால், மீண்டும் அஇஅதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்பது சிலரது கருத்தாக உள்ளது. திமுக, முன்பைவிட  மிக பலவீனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி, பாஜக மற்றும் பாமக அணிகள் அதிமுகவைவிட திமுகவை கடுமையாக விமர்சிக்கின்றன.
 
திமுக-வைவிட அதிமுக வாக்குவங்கி இரண்டு மடங்கு அதிகம் என்று சிலர் சொல்வது, பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வாங்கிய 44 சதவிகித வாக்குகளை வைத்துத்தான். ஆனால்பாராளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்த தேமுதிக, சிபிஐ, சிபிஎம், புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்றவைகள் அதிமுகவுடன் இப்போது இல்லைஅதிமுக கூட்டணி அந்தத் தேர்தலில் வாங்கிய வாக்கு 51 சதவிகிதம். அதிமுக மட்டும் தனித்து வாங்கியது வெறும் 38 சதவிகிதம் மட்டுமே.
 
எனவே, இந்த முறை, அதிமுக-வுக்கு வாக்கு இழப்பு உள்ளது. குறிப்பாக அதிமுக எதிர்ப்புநிலை, 5 வருடத்துக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கும் நடுநிலையாளர்கள்,  மக்கள் மனோநிலை, வேட்பாளர்கள் மீது அதிருப்தி, கட்சி கோஷ்டி பூசல் என அதிமுக பல வழிகளில் தனது வாக்குகளை இழக்கும் நிலையில் உள்ளது. எனவே, இந்த முறை அதிமுக  தனது வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
 
அதிமுகவின் பாதகங்கள், மற்றும் எதிர்ப்பு நிலைகள், முறையான கூட்டணி, கூட்டணி ஒத்துழைப்பு, முஸ்லீம் வாக்குள் என திமுக தனது வாக்கு வங்கியை ஓரளவு உயர்த்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மக்களை அடிக்கடி சந்திக்காததாலும், சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தின் போது வந்து பார்க்காததாலும், மக்களிடம் அது குறித்த அதிருப்தி இருக்கிறது. தேமுதிக - மக்கள்நலக்கூட்டணி வாக்குகளை பிரித்து, அதிமுக வெற்றி பெற வழிவகுக்கும் என்று மக்கள் கருதுவார்களே ஆனால், அவர்கள் திமுகவுக்கு தங்களது வாக்குகளை அளிப்பார்கள். 
 
எனவே, இந்த முறை அதிமுகவுக்கும், திமுகவுக்கும் நேரடி யுத்தம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆனால், இதில் அதிமுக-வுக்கே அதிக இழப்புகள் இருக்கும். திமுக ஒரு படிமேலே செல்லும் என்பது தான் மக்களின் இப்போதைய மனநிலையாக என்கிறார்.