வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2016 (04:37 IST)

சந்திரகுமார் உருவ பொம்மை எதிர்ப்பு

சந்திரகுமார் உருவ பொம்மை எதிர்ப்பு

தேமுதிக எம்எல்ஏ-வும், அக்கட்சியின் கொறாடாவுமான சந்திரகுமாரின் உருவப் பொம்மையை எரித்து அக்கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
 

 
மக்கள் நலக் கூட்டணியினருடன் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரக்குமார் தலைமையில், கும்மிடிபூண்டி சி.எச்.சேகர், தேமுதிக துணை செயலாளர் தேனி முருகேசன், மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்களும், 10 மாவட்டச் செயலாளர்களும் போர்க் கொடியை தூக்கியுள்ளனர்.
 
இது குறித்து, இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து சந்திரகுமார் பேசுகையில், நிர்வாகிகளின் விருப்பத்திற்கு மாறாக விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாகவும், நாளை மதியத்திற்குள் அவர்களை அழைத்துப் பேசி, திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
மேலும், தேமுதிகவிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும், திமுகவுடன் கூட்டணி வைப்பதே எங்கள் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
 
இந்த நிலையில், சந்திரகுமார் தலைமையில்  எதிராக போர்க்கொடி உயர்த்திய அனைவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளார் விஜயகாந்த்.
 
இந்த நிலையில், புதுக்கோட்டையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி அவதூறாக பேசியதாக எம்எல்ஏ-வும், அக்கட்சியின் கொறாடாவுமான சந்திரகுமாரின் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். இதே போல தமிழகம் முழுக்க சந்திரகுமார் உருவபொம்மை எரிக்கப்பட்டு வருகிறது.