வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 மே 2015 (11:08 IST)

பாலம் கட்ட அனுமதி வழங்க 50 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித்துறை பொறியாளர் கைது

பாலம் கட்ட அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை பொறியாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
 
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் யூனியன் ரோட்டை சேர்ந்தவர் பொற் செழியன். அவருக்கு வயது 54. இவர் பொதுப்பணித்துறையில் சிற்றாறு பாசன திட்ட இளநிலை பொறியாளரா உள்ளார்.
 
இவரது அலுவலகம் தென்காசியில் உள்ளது. சிற்றாற்றின் குறுக்கே சேர்ந்தமரத்தில் பொதுமக்கள் நிதி வசூலித்து பாலம் கட்ட முடிவு செய்தனர்.
 
அதற்காக அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் தடையில்லா சான்று கேட்டு தென்காசியில் உள்ள சிற்றாறு திட்ட இளநிலை பொறியாளர் பொற்செழியனை அணுகினார். அப்போது பொற்செழியன் பாலம் கட்ட தடையில்லா சான்று வழங்க ரூ.1½ லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்பபடுகிறது.
 
இதைத் தொடர்ந்து, முதலில் ரூ.50 ஆயிரம் தருவதாக அமல்ராஜ் கூறியுள்ளார். இதற்கிடையே அமல்ராஜ் நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் செய்தார்.
 
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பொறியாளர் பொற்செழியனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி அமல்ராஜிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்
 
 அவர் பொற்செழியன் அலுவலகத்திற்கு பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் பொற்செழியனை எகைது செய்தனர்.
 
பின்னர் அவரை தென்காசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையனர் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.