1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: செவ்வாய், 1 ஜூலை 2025 (12:28 IST)

பட்டப்பகலில் நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்! - ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் நர்சிங் மாணவி ஒருவரை மருத்துவமனையில் வைத்து பல பேர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேசத்தில் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவமனையில் சந்தியா சவுத்ரி என்ற மாணவி நர்சிங் படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாணவி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தபோது, திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் மாணவியை சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

 

சுற்றிலும் ஏராளமானோர் இருந்தபோதும் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மருத்துவமனை விரைந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் மாணவியை கொன்றது அவரது காதலன் அபிஷேக் என்பதும், இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக அபிஷேக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அபிஷேக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K