கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடி பகுதியை சேர்ந்த வசந்தகுமார் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டார் சம்மதம் கிடைக்காததால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த முடிவின்படி, சனிக்கிழமை காலை மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், வசந்தகுமார் அங்கு சென்றுள்ளார். முதலில், மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக எண்ணி, வசந்தகுமார் அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த மாணவி கதறியதால், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த அரவக்குறிச்சி போலீசார், வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி தற்போது சிகிச்சையில் உள்ளார்.
Edited by Mahendran