திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (15:12 IST)

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் ஏஜெண்ட் மாநாடு கோவையில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தடுத்த மாநாடுகளுக்கு தவெக திட்டமிட்டு வருகிறது.

 

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த 114 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள 6 மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

 

234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி தேர்வு பணி முடிந்து 69 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தவெகவின் பூத் கமிட்டி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தின் பூத் கமிட்டி மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது.

 

அதைத் தொடர்ந்து மீதமுள்ள 4 மண்டலங்களில் அடுத்தடுத்து பூத் ஏஜெண்ட் மாநாடு நடைபெற உள்ளது. இந்த 4 மண்டலங்களின் மாநாட்டையும் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த மாநாடு மதுரையில் மே மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அதை முடித்துக் கொண்ட பின்னர் நடிகர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K