வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2025 (13:31 IST)

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!
தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லம் உட்பட, மொத்தம் 13 முக்கியப் பிரபலங்களின் வீடுகள் மற்றும் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
மிரட்டலுக்கு உள்ளானவர்களில் நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு சுந்தர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா மற்றும் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி ஆகியோரும் அடங்குவர். மேலும், அமலாக்கத்துறையின் சி.ஆர்.பி.எஃப். அலுவலகத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
 
இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் உடனடியாக 13 இடங்களிலும் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர், இந்த மிரட்டல் புரளி என்பது உறுதியானது. 
 
சென்னையில் இது போன்ற புரளி மிரட்டல்கள் அடிக்கடி வருவதால், மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறியும் விசாரணையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
 
 
Edited by Mahendran