இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த காதலி... இளைஞர் எடுத்த விபரீத முடிவு !

sinoj| Last Modified செவ்வாய், 26 மே 2020 (22:34 IST)

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்திநகரில் உள்ள தன் மாமா செந்தில் குமாரின்
வீட்டுக்குச் சென்று இரண்டு மாதங்களாக கொரோனா காலத்தால் ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியுள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் உள்ளதால் அதில் ஒரு பெண்ணுடன் பேசிக் பழகியுள்ளார்.இந்தப் பழக்கம் காதலாகியுள்ளது. பின், அந்தப் பெண் ஆனந்தகுமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.இதனால் ஆனந்தகுமார் மன உடைந்துள்ளார்.

சில நாட்களாக சோகமாக இருந்த ஆனந்தகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் ஆனந்தகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :