திமுக - அதிமுகவுடன் கூட்டணி இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் உறுதி!

Tamilisai Soundararajan
வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified ஞாயிறு, 19 ஏப்ரல் 2015 (11:52 IST)
2016ஆம் ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''தமிழக அரசை மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. இதனால், தமிழகத்தில் ஒரு மாற்று சக்தி தேவைப்படுகிறது.

இதனால், பாஜகவை தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியாக உருவாக்கும் வகையில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்வோம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போதும் வந்தாலும் அதை எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது.
திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான கட்சிகளுடன் இணைந்து பாஜக போட்டியிடும்'' என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :