வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2015 (14:53 IST)

பாஜக மாநில பொதுச்செயலாளர் போலி கையெழுத்திட்டு 5 கோடி மோசடி

போலி கையெழுத்திட்டு பாஜக மாநில பொதுச்செயலாளர் ஜி.கே. செல்வகுமார் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக கூறி லோட்டஸ் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் புகார் மனு அளித்துள்ளார்.
 

 
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் ஜி.கே.செல்வகுமார். இவர் கோவையை தலைமை இடமாக கொண்டு லோட்டஸ் என்கிற பெயரில் செய்தி தொலைக்காட்சி சேனலை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் அந்த தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனரான பாரதிமோகன் என்பவர் திங்களன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அமுல்ராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
 
இதில் தான் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து கடந்த 2013ம் ஆண்டு விலகி விட்டேன். ஆனால், அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது என்னுடைய கையெழுத்தை போலியாக இட்டு, தான் விற்றது போல் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பங்குகளை ஜி.கே.செல்வகுமார் மாற்றி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இது குறித்து செல்வகுமாரிடம் கேட்டபோது தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.