1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 டிசம்பர் 2025 (09:53 IST)

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?
தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக அதிமுகவிடமிருந்து 65 தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அதற்கான பட்டியலில் பரமக்குடி, சாத்தூர், கே.கவுண்டம்பாளையம், பல்லடம், சூலூர், சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளும் இடம்பெற்றுள்ளதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதை போலவே, சென்னையில் மயிலாப்பூர், தியாகராய நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய தொகுதிகளையும் கேட்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
பாஜக பெறும் இந்த 65 தொகுதிகள் போக அதிமுக கூட்டணிக்கு டிடிவி தினகரன், ஓ.பி.எஸ், பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் வந்தால் அந்த கட்சிகளுக்கும் சீட்டுகள் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே பாஜகவுக்கு மட்டும் 65 தொகுதிகளுக்கு அதிமுக ஒப்புக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva