ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக போட்டி இல்லை: மவுனம் கலைத்தார் தமிழிசை சவுந்தராரஜன்

K.N.Vadivel| Last Updated: திங்கள், 8 ஜூன் 2015 (15:11 IST)
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, இடைத் தேர்தலில் போட்டியிடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகின்றார்.

இதனால், திமுக, பாமக, தாமகா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி போன்ற பல முக்கிய கட்சிகள் எல்லாம் இடைத் தேர்தலை புறக்கணித்துவிட்டது.

இந்த நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியாதவது:-
ஆர்.கே. நகர் தொகுதியில, இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடக்குமா என்று சந்தேகமாக உள்ளது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் ஆணை யம் நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே இந்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாஜகவும், அதன் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவை செய்துள்ளது என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :