திங்கள், 19 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (15:37 IST)

சேகர் பாபுவை சந்தித்த பின்னரே செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தார்: நயினார் நாகேந்திரன்

nainar nagendran
அ.தி.மு.க-வின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை  அன்று விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறித்து அரசியல் அரங்கில் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
தான் "தூய்மையான அரசியலுக்காக" த.வெ.க-வில் இணைந்ததாக செங்கோட்டையன் கூறினார். மேலும், தான் பா.ஜ.க. அல்லது தி.மு.க. தலைவர்கள் எவரையும் சந்தித்து பேசவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
 
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். செங்கோட்டையனை பா.ஜ.க. அனுப்பி வைத்ததாக வரும் தகவல் தவறு என்று அவர் மறுத்தார். மாறாக, தி.மு.க. அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்த பின்னரே செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்ததாகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
 
செங்கோட்டையன் ஒரு பெரிய தலைவர் என்று பாராட்டிய நயினார், "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்தான் மதிப்பு" என்று கூறி, செங்கோட்டையன் எடுத்த முடிவு தனது தனிப்பட்ட பார்வையில் தவறானது என்றும் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran